165
ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ்; விமான நிறுவனம் தொடர்பில் எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழுவின் அறிக்கை இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சமர்ப்பிக்கப்படவுள்ள பரிந்துரைகளில் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் எதிர்காலம் தொடர்பான பல கொள்கை ரீதியான பரிந்துரைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ்; விமான நிறுவனம் தற்போது ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love