நாளை நடைபெறவிருந்த விசாரணையில் ஒரு நீதிபதி பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் அயோத்தி வழக்கு விசாரணை ரத்து செய்யப்பட்டுள்ளது.
அயோத்தி பாபர் மசூதி வழக்கு விசாரணை தொடர்ந்து பிற்போடப்பட்டு வருகின்ற நிலையில் வழக்கு விசாரணை நாளை 29ம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வைச் சேர்ந்த எஸ்.ஏ.பாப்டே என்பவர் தற்போது இல்லாததால் வழக்கு விசாரணை ரத்து செய்யப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தின் கூடுதல் பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதற்கு முன்பு ஜனவரி 10 திகதி இவ்வழக்கு விசாரிக்கப்பட இருந்த போதும் விசாரணை அமர்வில் இருந்த நீதிபதி லலித், அயோத்தி விவகாரத்தில் வழக்கறிஞராக முன்பு முன்னிலையாகியிருந்தமையினால் அவர் அமர்விலிருந்து வெளியேறியதனால் வழக்கும ஒத்திவைக்கப்பட்டது.இந்த நிலையில்மேலும் ஒருவர் புதிதாக இணைக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒருவர் விலகியுள்ளதனால் ரத்து செய்யப்பட்டுள்ளத.
இதனையடுத்து வழக்கு விசாரணை பிற்போடப்பட்டுக் கொண்டே போவதால் மக்களின் நம்பிக்கை சீர்குலைவதோடு, பொறுமையும் சோதிக்கப்படுவதாக உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.வழக்கில் தீர்வளிக்க முடியவில்லை என்றால் தங்களிடம் விட்டுவிடுங்கள். 24 மணி நேரத்தில் தீர்வு காண்கிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.