வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட கட்டுவன்- மயிலிட்டி வீதி (b-171), . தெல்லிப்பளை சந்தியிலிருந்து தெல்லிப்பளை வைத்தியசாலை ஊடாக வறுத்தலைவிளான்- கட்டுவன் சந்தி (b-437) வீதி மற்றும் கட்டுவன் சந்தியிலிருந்து ஆரம்பிக்கும் மல்லாகம்-சங்கானை வீதியின் ஒருபகுதியும் (b-170) குன்றும் குழியுமாக கடுமையாக சேதமடைந்துள்ளது.
இந்த வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீதிளான கட்டுவன் மயிலிட்டி வீதி இராணுவக்கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டு ஒரு வருடமாகின்றது. அத்துடன் வறுத்தலைவிளான் கட்டுவன் சந்தி ,கட்டுவன் சந்தி- மல்லாகம் வீதி விடுவிக்கப்பட்டு இரு வருடங்களுக்கு மேலாகிறது.
இதுவரைக்கும் இந்த வீதிகளை புனரமைக்கவில்லை. அதுமட்டுமல்லாது மக்கள் பயணம் செய்வதற்கு தற்காலிகமாகவேனும் திருத்திக்கொடுக்கப்படவில்லை. மழை காலங்களில் பெரிதும் சிரமப்பட்டே இந்த குன்றும் குழியான வீதியில் பயணிக்கவேண்டியூள்ளது. வீதியின் இரு மருங்கிலும் பற்றைகள் இருக்கும் நிலையில் மழைகாலங்களில் அதற்கு அருகாமையாலேயே செல்லவேண்டிய நிலைஉள்ளது.
அண்மையில் கூட தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு சென்றுகொண்டிருந்த கர்ப்பிணிப்பெண்ணுக்கு வீதியிலேயே குழந்தை பிறந்த சம்பவம்கூட இடம்பெற்றுள்ளது. இப்பகுதியில் மக்கள் மீள்குடியேறி வருகின்றனர். தெல்லிப்பளை வைத்தியசாலை கூட உள்ளது. அத்துடன் பாடசாலை மாணவர்கள் , வர்த்தக நிறுவனங்களுக்கு என மக்கள் செல்லும் வீதியை புனரமைப்பு செய்ய வேண்டியது கட்டயமானதாகும். எனினும் இதுகுறித்து வீதிஅபிpருத்தி அதிகாரசபை அதிகாரிகள் அசண்டையீனமாக உள்ளார்களா என மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
அடுத்து ஒரு மாதம் தொடர்ந்து மழை பெய்யூமாக இருந்தால் வீதியில் உள்ள குழிகள் பெரிதாகி இறந்த பெரிய யானையை கூட புதைக்கும் அளவுக்கு மாறும் நிலையே காணப்படுகிறது. மீள்குடியேற்ற பிரதேசமான இப்பகுதிக்கு எத்தனையோ அதிகாரிகள் வந்து செல்கின்றனர். பிரதேச செயலர் அரச அதிபர் கூட வருவார் ஆனால் வீதியின் நிலையை ஏன் உணர்ந்து திருத்த என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் எனவும் மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். எனவே தற்போது பதவியேற்றுள்ள புதிய ஆளுநர் சுரேன் ராகவன் , யாழ்.மாவட்ட அரச அதிபர் என்.வேதநாயகன் மற்றும் பிரதேச செயலர் ச.சிவஸ்ரீ ஆகியோர் வீதியை உடனடியாக காப்பெட் வீதியாக புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.