165
பெருவின் தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அப்ரிமாக் பிராந்தியத்தின் அன்டியன் நகரின் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள விடுதி ஒன்றின் மீது மண் மேடு சரிந்து வீழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடுதியில் திருமண நிகழ்ச்சிக்காக விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் 100 க்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடியிருந்த நிலையிலேயெ இவ்வாறு எதிர்பாரத விதமாகவே மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
உடனடியாக அப் பகுதிக்கு சென்ற மீட்பு பணியின் 15 பேரின் உடல்களை மீட்டதுடன் காயமடைந்த 29 பேரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
Spread the love