வன்முறையின்மை மற்றும் சமாதானத்துக்கான சர்வதேசப் பாடசாலை தினம் நாளை 30ம் திகதி பாடசாலைகளில் அனுஸ்டிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல் செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த 5 ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டதைப் போன்று, இவ்வாண்டும் சர்வஜன வாக்கெடுப்பைப் பாதுகாப்போம் என்ற தமது தொனிப் பொருளின் ; கீழ், வன்முறையற்ற சமாதானத்துக்கான சர்வதேச பாடசாலைத் தினம் அனுஸ்டிக்கப்படவுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வாக்குரிமை தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்துவதற்காகவும் தற்போதைய மற்றும் எதிர்கால வாக்காளர்களையும் தெளிவூட்டும் வேலைத்திட்டத்தை தாம் முன்னெடுத்துள்ளதாகக் கூறிய அவர், கல்வியமைச்சுடன் இணைந்தே இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளர்h.
12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் சகல பாடசாலைகளிலும், வன்முறையற்ற சமாதானம் தொடர்பில், அதிபர்கள், சுமார் 15 நிமிட உரையை நிகழ்த்துவார்கள் எனவும் சர்வஜன வாக்குரிமையின் முக்கியதுவத்தை வலியுறுத்தும் வகையிலேயே இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.