கடந்த 2008ஆம் ஆண்டில் அசாமில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தேசிய போடோலாந்து குடியரசு முன்னணி இயக்கின் தலைவர் ரஞ்சன் தைமாரி உள்படி 15 பேர் குற்றவாளிகள் என கண்டறிந்துள்ள நீதிமன்றம் அவர்களுக்கான தண்டனை விபரம் நாளை வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளது.
அசாமில் 2008-ம் ஆண்டு ஒக்டோபரில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பில் 88 பேர் உயிரிழந்துள்ளதுடன் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர். போடோ இன மக்களுக்காக தனி நாடு கோரி போடோலாந்து குடியரசு முன்னணி தீவிரவாத இயக்கத்தினரால் 9 இடங்களில் குண்டுவெடித்தது.
இந்த சம்பவம் தொடர்பாக 22 பேர் மீது குற்றம்சாட்டப்பட்ட நிலையில் 7 பேர் தலைமறைவாக உள்ள நிலையில் 15 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது.
சும்பவம் தொடர்பில் 650 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு 687 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நிறைவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது