இந்திய அணியின் சகலதுறை ஆட்டக்காரான அம்பத்தி ராயுடுக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்துப் பரிமாற்றம் மேற்கொள்வதற்கு ஐ.சி.சி. தடை விதித்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியின்போது அம்பத்தி ராயுடு பந்துப் பரிமாற்றம் மேற்கொண்ட போது அவரது பந்து ஐ.சி.சி.யின் விதிமுறைக்கு மாறாக காணப்பட்hக நடுவர்கள் முறைப்பாடு செய்திருந்தனர்.
இதனை அடுத்து அவரது பந்து வீச்சை 14 நாட்களுக்குள் ஐ.சி.சி. அங்கீகாரம் பெற்ற பந்து வீச்சு பரிசோதனை மையத்தில் சோதனைக்குட்படு;துமாறு ஐ.சி.சி. உத்தரவிட்டிருந்த நிலையில் அவர் பரிசோதனைக்குட்படுத்தவில்லை.
இதைத்தொடர்ந்தே அவருக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பந்து வீச ஐ.சி.சி. தடை விதித்துள்ளது.
மேலும் அவர் பந்து வீச்சு சோதனையில் முன்னிலையகி அதன் ஆய்வு அறிக்கையின் முடிவு தெரியும் வரை அவர் சர்வதேச போட்டியில் பந்து வீச முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது