161
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.பொன்னாலை பகுதியில் 12 கிலோ கஞ்சா போதை பொருளை மீட்டுள்ளதாகவும் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் வட்டுக்கோட்டை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து நேற்று செவ்வாய்க்கிழமை இரவு குறித்த கஞ்சாவை மீட்டதாகவும் , அதனை விற்பனை செய்யும் நோக்குடன் வைத்திருந்த மாதகலை சேர்ந்த 38 வயதுடைய சந்தேக நபரை கைது செய்ததாகவும் தெரிவித்த காவல்துறையினர் கைது செய்யப்பட்ட நபரை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
Spread the love