207
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நெல் அறுவடையின் போது பாம்பு தீண்டிய நிலையில் குடும்ப பெண்ணொருவர் ஆபத்தான நிலையில் சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
தென்மராட்சி மந்துவில் பகுதியில் உள்ள வயலில் நெல் அறுவடை செய்து கொண்டிருந்த மந்துவில் வடக்கை சேர்ந்த 57 வயதுடைய குடும்ப பெண் ஒருவரையே புடையன் பாம்பு தீண்டியுள்ளது.
அதனை அடுத்து அங்கிருந்தவர்கள் பாம்பு தீண்டிய பெண்ணை மீட்டு சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.
Spread the love