127
சட்ட விரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த இந்தியப் பிரஜைகள் இருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் யாழ்ப்பாணம் அச்சுவேலி தோப்பு சந்திக்கு அண்மையில் வைத்து கைது செய்யப்பட்டடுள்ளனர்.
இவர்களின் கடவுச்சீட்டை சோதனையிட்ட போதே இவர்கள் வீசா இன்றி நாட்டிற்குள் சட்ட விரோதமான முறையில் தங்கியுள்ளமை தெரிய வந்துள்ளது.
45 மற்றும் 50 வயதுடைய இந்திய பிரஜைகள் இருவரும் அச்சுவேலிப் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றில் தொழில் புரிந்து வந்துள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
Spread the love