155
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான தலைவருமாகிய அங்கஜன் ராமநாதனுக்கும் வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்குமிடையிலான சந்திப்பு இன்று (30) மாலை ஆளுநரின் செயலகத்தில் இடம்பெற்றது.
வடக்கு மாகாணத்தில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இந்த சந்திப்பின்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் அவர்களை பொருளாதார ரீதியில் பலப்படுத்துவதற்கு மேற்கொள்ளக்கூடிய சாத்தியமான வழிமுறைகள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது.
Spread the love