வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான தாக்கல் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வட மாகாண போக்குவரத்து, உள்ளூராட்சி மற்றும் மீன்பிடித்துறை அமைச்சாராக பா.டெனீஸ்வரனை நியமிக்க வேண்டும் என நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியதன் மூலம் சிவி விக்கினேஸ்வரன் நீதிமன்றை அவமதித்த குற்றம் சுமத்தி தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கே இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வட மாகாண முன்னாள் அமைச்சர் ப.டெனீஸ்வரனினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கு தொடபிலான தீர்ப்பு இன்றையதினம் அறிவிக்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் குறித்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ள நிலையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Spread the love
Add Comment