202
சோழர்களில் முக்கியமானவனும், ராஜராஜ சோழன் என்று அழைக்கப்படும் அருள்மொழிவர்மன் எனும் பொன்னியின் செல்வன் புத்தகத்தை தமிழில் இணைய தொடராக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சவுந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் கல்கியின் அமர காவியமான `பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக்குவதற்கும் அதில் வந்தியத்தேவனாக நடிப்பதற்கும் எம்.ஜி.ஆர், கமல்ஹாசன் என பலரும் விருப்பம் தெரிவித்தனர். எனினும் அந்த முயற்சிகள் நிறைவேறவில்லை. தற்போது இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வனை திரைப்படமாக இயக்க ஆரம்ப கட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் சவுந்தர்யா ரஜினிகாந்த் ‘பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி ஒரு சரித்திர வலைத்தொடரை தயாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து சவுந்தர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’பல்லாண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்த சோழ அரசின் காலத்தைப் பற்றி விறுவிறுப்பும் வீரமும், தொன்மையும், காதலும், நகைச்சுவையும் கலந்த காவியமாக இது இருக்கும். இந்த நாவலைப் படித்த நாள் முதலே எனக்கு இதைக் காட்சிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்தது’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love