170
தனுஷ் நடிப்பில் `அசுரன்’ படப்பிடிப்பு அண்மையில் ஆரம்பித்துள்ள நிலையில், பிரபல நடிகர் கருணாசின் மகன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷ் நடிப்பில், வட சென்னையை தொடர்ந்து ’அசுரன்’ படப்பிடிப்பை வெற்றிமாறன் ஆரம்பித்துள்ளார். இந்த படத்தில் நாயகியாக மலையாள திரையுலகின் பிரபல நடிகை மஞ்சு வாரியர் நடிக்கின்றார். இது அவரின் முதல் தமிழ்த் திரைப்படமாகும்.
இந்தப் படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் கருணாசின் மகன் கென் கருணாசை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளது. இவர் ஏற்கனவே அழகு குட்டி செல்லம், நெடுஞ்சாலை படங்களில் நடித்துள்ளார்.
கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி, கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தில் நடைபெற்று வருகின்றது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.
Spread the love