குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தலைமன்னார் புகையிரத வீதி பகுதியில் வைத்து ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளுடன் அப்பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் மன்னார் மாவட்ட காவல்துறை ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து சுமார் 14 இலட்சம் ரூபாய் பெறுமதியான 14 கிலோ 690 கிராம் எடை கொண்ட கேரள கஞ்சப்பொதிகள் மீட்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் சியந்த பீரிஸ் அவர்களின் வழிகாட்டலில் மன்னார் மாவட்ட காவல்துறை ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் குறித்த சந்தேக நபரை கைது செய்ததோடு,அவரிடம் இருந்து குறித்த கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட குறித்த குடும்பஸ்தர் விசாரணைகளின் பின்னர் தலைமன்னார் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகளும் தலைமன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தலைமன்னார் காவல்துறையினர்; மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.