மெக்சிகோவின் தெற்குப் பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி நேற்று காலை சியாபாஸ் மாநிலம் தபசுலாவில் இருந்து 10 மைல் தொலைவில், கடலுக்கடியில் 40 மைல் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் கடுமையாக குலுங்கியதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி நீண்ட நேரம் திறந்தவெளியில் தஞ்சமடைந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் காரணமாக சில கட்டிடங்களில் லேசான விரிசல் ஏற்பட்டதுடன் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
எனினும் நிலநடுக்கம் மற்றும் அதனால் ஏற்பட்ட விபத்துக்களில் பெரிய அளவில் சேதங்கள் ஏற்பட்டதாக தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
இதே பகுதியில் கடந்த 2017ம் ஆண்டு 8.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டபோது, 100 பேர் உயிரிழந்துள்ளதுடன் அதன்பின்னர் மெக்சிகோ சிட்டி உள்ளிட்ட மத்திய பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது