ரஸ்ய சட்டவிதிகளை மீறியமைக்காக கூகுள் நிறுவனத்துக்கு ஏழாயிரத்து 600 அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ரஸ்யாவில் கூகுள் உள்ளிட்ட தேடுபொறிகளில், சட்டவிரோத தகவல்களை கொண்ட தளங்கள் இடம் பெறக்கூடாதென கடந்த ஓக்டோபர் மாதம் அரசு புதிய சட்டம் ஒன்று இயற்றப்பட்டிருந்தது.
எனினும் கூகுள் தேடுபொறி இந்த சட்டத்தை பின்பற்றவில்லை எனவும் தடை செய்யப்பட்ட தளங்கள் அந்த தேடுபொறியில் தொடர்ந்து இடம் பெற்று வவருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இதையடுத்து சட்ட விதிகளை மீறிய குற்றத்துக்காக கூகுள் நிறுவனத்துக்கு இவ்வாறு ஏழாயிரத்து 600 அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த அபராத தொகையை கூகுள் நிறுவனம் செலுத்தி விட்டதாக ரஸ்ய தகவல் தொடர்பு அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது