அமெரிக்காவின் மேற்கு திசையிலுள்ள மத்திய பகுதிகளில், பல தசாப்தங்களில் இல்லாத அளவு நிலவும் கடுங்குளிர் காரணமாக இதுவரை குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
250 மில்லியன் அமெரிக்க மக்கள், துருவ சுழற்சியால் ஏற்பட்டுள்ள இந்த கடுங்குளிரை அனுபவித்து வருகின்றனர் எனவும் அதிகப்படியான குளிரை எதிர்கொள்வதால் தோலில் ஏற்படுகின்ற காயங்களுக்கு பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த குளிரில் பொதுவாக வீடற்றவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக நகர் முழுவதும் வெதுவெதுப்பான தங்கு நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சிகாகோவில் உள்ள மருத்துவமனை ஒன்று குளிரால் பாதிக்கப்பட்ட 50 நோயாளிகளுக்கு சிகிச்சை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல ஆபத்தான வீதிகளும் உயிரிழப்புகள் ஏற்பட்டக் காரணமாக அமைந்துள்ளதாகவும் பலர் பனி உறைந்த வீதிகளில் சிக்கி விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தநிலையில் இந்தக் காலநிலை எதிர்வரும் வெள்ளிகிழமையளவிலர் சற்று மாறும் என எதிர்வு கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது