தெலுங்கானாவில் ஒப்பரேசன் ஸ்மைல் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 2119 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கானா அரசு குழந்தை தொழிலாளர்களை மீட்பதற்காக ஒப்பரேசன் ஸ்மைல் எனும் திட்டத்தை செயல்படுத்தி அதன்மூலம் அதிகாரிகள் சோதனை நடத்தி குழந்தை தொழிலாளர்களை மீட்டு வருகின்றனர். அவ்வகையில், கடந்த ஜனவரி மாதம் 5வது கட்டமாக ஒப்ரேசன் ஸ்மைல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு அதற்காக தனி குழு அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நடவடிக்கையில் இதுவரை 466 சிறுமிகள் உட்பட 2,119 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர் எனவும் மீட்கப்பட்ட 274 பெண் குழந்தைகள் உட்பட 1303 பேர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகையிரத நிலையங்கள் , பேருந்து நிலையங்கள், கோவில்கள், வீதி ஓரங்கள் மற்றும் போக்குவரத்து சிக்னல் போன்ற இடங்களில் இருந்து பல குழந்தைகளை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதனையடுத்து குழந்தைகளை பணிக்கு அமர்த்திய தொழிற்சாலைகள், செங்கல் சூளைகள் மீது 58 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது