141
வடக்கில் இவ் ஆண்டின் முதல் மாதத்தில் மாத்திரம் சுமார் 400 கிலோவுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பாக 111 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளதாகவும் வடக்கு சிரேஸ்ட பிரதி காவற்துறை மா அதிபர் ரொசான் பொர்னான்டோ தெரிவித்துள்ளார். இன்று காலை காங்கேசன்துறையில் இடம்பெற்ற விஷேட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் கடந்த ஆண்டில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் அதனோடு தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love