168
நானுஓயா காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட டெஸ்போட் தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்களைக் காணவில்லை என, நானுஓயா காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
12 மற்றும் 14 வயதுகளை உடைய இருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். விளையாட்டுப் போட்டிப் பயிற்சிகளுக்காக பாடசாலை செல்வதாக சென்ற சிறுவர்கள் இருவரும் இதுவரை வீடு திரும்பவில்லை என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சிறுவர்களை கண்டால், உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் அவர்களை ஒப்படைக்குமாறு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Spread the love