மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தும் முறைமை தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுக்குமிடையில் விசேட கலந்துரையாடலொன்று அடுத்த வாரம் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய ஒன்பது மாகாண சபைகளுக்கான தேர்தல்களையும் யும் ஒரே தினத்தில் நடத்துவதாக இருந்தால் ஊவா மாகாண சபை அதன் ஆயுட்காலம் நிறைவடைவதற்கு முன்னரே கலைக்கப்பட வேண்டும்.
மேலும் தேர்தல்கள் பழைய முறைமையில் நடத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி ஆலோசனை தெரிவித்துள்ள நிலையில் அவ்வாறு மேற்கொள்வதாயின் பாராளுமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களது ஒத்துழைப்புடனும் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
இது தொடர்பிலேயே விசேட கலந்துரையாடலொன்றுக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளதாக சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்