199
இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 18ஆம் திகதி இத் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு சில நாட்களில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
1996இல் கமல்ஹாசன் நடிக்க, இயக்குனர் சங்கர் இயக்கிய திரைப்படம் இந்தியன். தந்தை, மகன் என இரு வேறு பட்ட கதாபாத்திரங்களில் இப் படத்தில் கமல் நடித்தார். இலஞ்சம், ஊழலுக்கு எதிராக எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
இன்று வரையில் இப் படம் புகழ் பெற்று விளங்குகின்றது. இந்த நிலையில் 22 ஆண்டுகள் கமலும் சங்கரும் இணைந்து இந்தியன் 2 படத்தை உருவாக்க தயாராகி வருகின்றனர். இந்தப் படத்தில் கமலுக்கு நாயகியாக காஜல் அகர்வால் நடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் டெல்லி கணேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அனிருத் இசையமைக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். அரசியல் கட்சிப் பணிகளின் மத்தியில் இந்த திரைப்படத்திற்காக தனது உடலை மாற்றியமைக்கும் முயற்சிகளிலும் கமல் ஈடுபடுகின்றார்.
கமலுக்கான ஒப்பனைகள் திருப்தி அளிக்காமை காரணமாகவே இத் திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இயக்குனர் சங்கர் மற்றும் கமல் இது தொடர்பான முடிவை எடுத்துள்ளனர். இதேவேளை அமெரிக்காவில் இருந்து ஒப்பனைக் கலைஞர்களை அழைத்துவரவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Spread the love