குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மன்னாரில் கடந்த இரு நாட்களாக பெய்த கடும் மழையின் காரணமாக பாதீக்கப்பட்ட மன்னார் கீரி கிராமத்தைச் சேர்ந்த சில குடும்பங்களின் வீடுகளுக்கு மேல் போடுவதற்கான அவசர உதவியாக தரப்பால்கள் நேற்று திங்கட்கிழமை(4) மாலை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மன்னாரில் பெய்த கடும் மழையின் காரணமாக மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கீரி கிராமத்தில் பல வீடுகள் முழுமையாக நலையும் நிலை காணப்பட்டது.
ஓலைக்குசைகளில் வாழ்ந்து வரும் பல குடும்பங்கள் பல்வேறு துன்பங்களுக்கு முகம் கொடுத்ததோடு,தமது வீடுகளுக்கு மேல் போட்டு தங்களையும்,தமது உடமைகளையும் பாதுகாக்க தரப்பால்களை பெற்றுத் தருமாறு மன்னார் பிரதேச சபையின் உறுப்பினரும்,டெலோ கட்சியின் மாவட்ட அமைப்பாளருமான ஏ.ரி.மோகன்ராஜீடம் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,டெலோ கட்சியின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனின் சொந்த நிதியிலிருந்து பெற்றுக்கொடுத்த நிலையில்,மன்னார் பிரதேச சபை உறுப்பினர் ஏ.ரி.மோகன்ராஜ் நேற்று (4) திங்கட்கிழமை மாலை குறித்த பகுதிக்குச் சென்று பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு மேல் போடுவதற்கான தரப்பால்களை வழங்கி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.