பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மோதல் சம்பந்தமான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளை அடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகிய பிரதான இரண்டு கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்ட அரசியல் முரண்பாடுகளினையடுத்து கடந்த நவம்பர் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதல்கள் பாரிய குழப்பநிலையினை உருவாகியிருந்தது.
இதனையடுத்து இந்தக் குழப்பங்களின் போது அரச ஊழியர்களை தாக்கிய மற்றும் அரச சொத்துக்களை சேதமாக்கிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் எழுவர் கொண்ட பாராளுமன்ற விசாரணைக் குழுவொன்று சபாநாயகர் கரு ஜெயசூரியவினால் நியமிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பாராளுமன்ற குழு கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் திகதி சபாநாயகர் கருஜயசூரியவிடம் அறிக்கையை சபாநாயகரிடம் கையளித்ததுள்ளதாகவும் அது தொடர்பில் சபாநாயகர விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் பிரதி சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
59 பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற விதிகள், சட்டத்தை மீறியுள்ளனர் என கண்டறியப்பட்டு அவர்களுக்கெதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற விசாரணைக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.