155
புதிய தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் விதமாக வாக்களிக்கும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்கற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கம் அமைக்கும் முயற்சியில் ஐக்கியதேசிய முன்னணி அரசாங்கம் ஈடுபட்டுள்ள நிலையில், அதற்கான யோசனையும் சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம கையளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்குமாறு ஏற்கனவே அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் அழைப்பு விடத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love