191
லஞ்சம் வாங்கிய முறைப்பாட்டின் பேரில் போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் சென்னை காவல் ஆணையாளரினால் பணி நீக்கம் செய்துள்ளார். லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதனையடுத்து அதனை ஆராய்ந்த சென்னைக் காவல் ஆணையாளர் குறித்த போக்குவரத்துக் காவல் ஆய்வாளரான ரவிச்சந்திரன் என்பவரை பணிநீக்கம் செய்துள்ளார். மேலும் அவர் மீது துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆண்மையில் சென்னை தேனாம்பேட்டையில் காவலர் ஒருவருக்கு விடுமுறை தர மறுத்ததோடு, அவரை துரத்திச் சென்று விபத்தில் சிக்கவைத்தது தொடர்பான குற்றச்சாட்டில் ஆய்வாளர் ரவிச்சந்திரன் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love