193
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் ஆதரவுடன் வடக்கு மாகாண கல்வித் திணைக்களம் வடமாகாணத்திலுள்ள 12 கல்வி வலயங்களிலும் உள்ள உயர்தரப் பரீட்சையில் தமிழ்ப்பாடத்திற்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்குக் கருத்தரங்கை நடத்தவுள்ளது.
இந்த ஆண்டு பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மாணவர்கள் சீருடையில் இக்கருத்தரங்கில் பங்கேற்றுப் பயன்பெற முடியும்.
இக்கருத்தரங்கில் வளவாளர்களாக யாழ்ப்பாணம், பேராதனை, கிழக்கு, தென்கிழக்கு பல்கலைக்கழகங்களைச் சார்ந்த பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
கருத்தரங்குகள் எதிர்வரும் 11 ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரை வடமாகாணத்தின் வெவ்வேறு இடங்களில் இடம்பெறவிருப்பதாகவும் இது பற்றிய விபரங்களை வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினர் சம்பந்தப்பட்ட பாடசாலைகளுக்கு அறிவிப்பர் எனவும் தமிழ்ச்சங்கம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love