டுபாயில் வைத்து அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட, இலங்கையின் பிரபல போதைப்பொருள் வர்த்தகரான மாகந்துரே மதுஷை, இலங்கைக்கு நாடுகடத்துவது தொடர்பில், தற்போது விசேட பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுஷை இலங்கைக்கு நாடுகடத்த முடியுமா என்பது தொடர்பில், அந்நாட்டு அதிகாரிகள் அவதானம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை மதுஷ் உள்ளிட்ட அவரது சகாக்களை இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பில் வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியன இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாக, இலங்கை காவல்துறைத் தரப்பு தெரிவித்துள்ளது.
பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும், பாதாள உலகக் குழுவின் தலைவரான மாகந்துரே மதுஷ் என்றழைக்கப்படும் சமரசிங்க ஆரச்சிகே மதுஷ் லக்ஷித்த உள்ளிட்ட 25 பேர், டுபாயில் அந்நாட்டுக் காவல்துறையினரால் நேற்றையதினம் கைதுசெய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது