லண்டனில் நினைவுச் சின்னமாக பாதுகாக்கப்பட்டு வந்த தத்துவமேதை காரல்மார்க்ஸ் கல்லறையை இனந்தெரியாதோர் சேதப்படுத்தியுள்ளனர். ஜெர்மனியை சேர்ந்த புரட்சிகர தத்துவமேதை காரல் மார்க்ஸின் கருத்துக்கள் கம்யூனிசத்தை அடிப்படையாக கொண்டவை. இவர் கடந்த 1849-ம் ஆண்டு இங்கிலாந்து தலைநகர் லண்டனில் குடியேறி தங்கியிருந்த நிலையில் 1885-ம் ஆண்டு 64-வது வயதில் மரணமடைந்திருந்தார்.
இதனையடுத்து வடக்கு லண்டனில் உள்ள கல்லறை அங்கு நினைவுச் சின்னமாக பாதுகாக்கப்பட்டு வருவதுடன் பாரம்பரிய சின்னமாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் மார்க்ஸ் கிரேவ் டிரஸ்டுக்கு சொந்தமான இந்த கல்லறையும் கல்லறையில் வைக்கப்பட்டுள்ள நினைவு கல்வெட்டும் இனந்தெரியாத நபர்களால் உடைத்து இடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 1880-ம் ஆண்டுகளில் இக்கல்லறை சேதப்படுத்தப்பட்டு பின்னர் சீரமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.