Home சினிமா தனுஷிற்கு வில்லனாகும் பிரபல இயக்குனர்

தனுஷிற்கு வில்லனாகும் பிரபல இயக்குனர்

by admin


பிரபல இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில் தனுஷ் மற்றும் மஞ்சு வாரியர் நடிக்கும் ’அசுரன்’ திரைப்படத்தில் பிரபல இயக்குநர் பாலாஜிசக்திவேல் வில்லனாக நடிக்கவுள்ளார்.
`வட சென்னை’ படத்தையடுத்து, தனுஷ் – வெற்றிமாறன்இணைந்து பணியாற்றும் திரைப்படம் ’அசுரன்’ ஆகும். இந்தத் திரைப்படத்தில் தனுஷின் நாயகியாக மஞ்சு வாரியர் நடிக்கின்றார். அத்துடன் படத்தில் வில்லனாக `காதல்’, `வழக்கு எண் 18/9′ உள்ளிட்ட படங்களை இயக்கிய பாலாஜி சக்திவேல் நடிக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் வெற்றிமாறன் இயக்கியுள்ள `அசுரன்  படத்தில் அமீர், சமுத்திரக்கனி முதலிய முன்னணி இயக்குநர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அத்துடன் முக்கிய கதாபாத்திரத்தில் கருணாசின் மகன் கென் கருணாஸ் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி, கோவில்பட்டி இடம்பெற்று வருகின்றது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.

எழுத்தாளர் பூமணியின் `வெக்கை’ புத்தகத்தை தழுவி இத் திரைப்படம் உருவாக்கப்படுகின்றது. நிலத்தை கையகப்படுத்துவதால் மக்களின் வாழ்வாதாரம் எவ்வாறு பாதிக்கப்படுகின்றது என்பதை மையப்படுத்திய கதையாக இந்தத் திரைப்படம் எடுக்கப்படுகின்றது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More