225
அவுஸ்திரேலியாவின் மேற்கு மாநிலத்தில் உள்ள பேர்த் மாநகரில் இயங்கி வரும் தெற்கு தமிழ்ப் பாடசாலையின் வருடாந்த தமிழ் விழா நடைபெற்றது. இந்நிகழ்வு கடந்த 24.11.2018 தெற்கு தமிழ்ப் பாடசாலையால் மிகவும் சிறப்பாக ஒழுங்மைக்கப்பட்டு நடத்தப்பட்டது.
தமிழர்களின் மொழி, கலை, கலாச்சார மற்றும் பண்பாட்டு விழுமியங்களை வெளிப்படுத்தும் வகையில் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆடல், பாடல், நாடகம், வில்லுப் பாட்டு போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்தப் பாடசாலையில் கல்வி கற்று வரும் சுமார் 300-க்கும் அதிகமான சிறுவர்கள் பங்கேற்று தமது திறமைகளை வெளிப்படுத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love