156
கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தினர் வசமிருந்த 14 பேருக்குச் சொந்தமான 21.24 ஏக்கர் காணி இன்று உரிiமாளர்களிடம் வடமாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் வழங்கி வைத்துள்ளார்.
காணிகளை கையளிக்கும் நிகழ்வு இன்று (07) 10.00 மணிக்;கு கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 39.95 ஏக்கர் காணிகளில் குறித்த காணிகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ள போதும் மேலும் 18.71 ஏக்கர் காணி ; உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love