போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவது மனித உரிமை மீறல் எனின், அக்குற்றவாளிகளின் குற்றச்செயல்களால் பாதிக்கப்பட்டவர்களின் மனித உரிமைகள் ஏற்கனவே மீறப்பட்டுள்ளமை கவனத்தில் கொள்ளப்படவேண்டும். அந்த வகையில் இத்தகைய குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனையை அமுல்படுத்தாவிடின் மனித உரிமைகள் மீறப்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும் என தேசிய ஒற்றுமைக்கான சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகளின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதை விடவும், அவர்களின் குற்றச்செயல்களால் பாதிக்கப்படுபவர்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதே அவசியமானதாகும் எனவும் குறிப்பிட்டார்.
இதேவேளை போதைப்பொருள் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை அமுல்படுத்த போவதாக ஜனாதிபதி கருத்து வெளியிட்டுள்ளமையைத் தொடர்ந்து, மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் அதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.