180
புதுமுக இயக்குனர் தீரன் இயக்கத்தில் சத்யராஜ் நடிக்கும் `தீர்ப்புகள் விற்கப்படும்’ படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சமுதாயத்தின் மீது ஒரு தனிமனிதனுக்கு இருக்கும் ஆதங்கத்தை வெளிப்படுத்திய `வெட்னஸ்டே’ பட பாணியில் உருவாகும் திரைப்படமே இது என்று இயக்குனர் தீரன் கூறுகிறார்.
படத்தின் தலைப்பு சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், அது கதைக்கு மிகவும் அவசியமாக இருந்தது. படப்பிடிப்பை தொடங்கியுள்ளதாகவும் கோடைவிடுமுறையில் படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாமிருக்க பயமே படத்திற்கு இசையமைத்த பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். அஞ்சி ஒளிப்பதிவு செய்ய சரத் படத்தொகுப்பை மேற்கொள்ளுகின்றார். ஹனிபீ கிரியேஷன்ஸ் சார்பில் சாஜீவ் மீரா சாஹிப் ராவுத்தர் இந்த படத்தை தயாரிக்கிறார்.
Spread the love