Home உலகம் பிலிப்பைன்சில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

பிலிப்பைன்சில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

by admin

பிலிப்பைன்ஸில் இன்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சுரிகாவ் டெல் நோர்டே மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் 5.9 ரிக்டர் அளவுகோலாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் நிலடுக்கம் காரணமாக அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

நிலநடுக்கத்தின் தாக்கம் மின்டானாவோ தீவு உள்பட பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.

ஏற்கனவே, 1990-ம் ஆண்டு வடக்கு பிலிப்பைன்சில் 7.7 ரிக்டர் அளவுகோலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More