இந்திய முன்னாள பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பில் கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்பட 7 பேரையும் விடுவிக்க ஆளுனர் கையெழுத்திட வேண்டும் என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார்
இவர்களது விடுதலையை வலியுறுத்தி தொடர்ந்த மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொண்டுவரும் அற்புதம்மாள் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகள் தங்களது தண்டனை காலத்தில் குற்றத்தின் தன்மை அறிந்து மனம் திருந்த அமைக்கப்பட்டது தான் சிறைச்சாலை. சட்டத்தின் மூலம் அளிக்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் கடந்த 28 ஆண்டுகளாக குறித்த 7 பேரும்; சிறையில் இருக்கிறார்கள்.
அதே சட்டத்தின் கீழ்; பணியாற்றும் தமிழக ஆளுனர் கொலை குற்றவாளிகள் என கருதப்படும் அந்த 7 பேரையும் உடனே விடுதலை செய்ய கையெழுத்திட வேண்டும் எனத் தெரிவித்த அவர் ஆளுனர் கையெழுத்திடும் வரை தனது மக்கள் சந்திப்பு பயணம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.