188
இந்தியா பாதுகாத்த தமிழீழ விடுதலைப் புலிகளே, முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியையும் இந்தியப் படையினர் 1500பேரையும் கொலை செய்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்தியாவின் பெங்களுரில் இருந்து வெளியாகும் இந்து நாளிதழுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு இந்தியா வழங்கிய புரிந்துணர்வு முக்கியமானது என்று கூறியுள்ள மகிந்த ராஜபக்ச, ஆனாலும் இந்தியாவின் பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்றதன் பின்னர், இரு நாடுகளுக்கும் இடையில் நல்லுறவு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சுய நலன்களுக்காக செயற்பட்ட சிலரினால் இந்தியாவும் இலங்கையும் அச்சுறுத்தலையும் பயங்கரவாதத்தையும் எதிர்கொண்டதாக குறிப்பிட்டுள்ள மகிந்த ராஜபக்ச, 1980களிலும் 2014இலும் இந்தியா இலங்கை உறவு முறிவடைந்ததாகவும் கூறியுள்ளார்.
ஈவிரக்கமற்ற பயங்கரவாத அமைப்புடன் போரிடடபோது இந்தியாவின் சினேகபூர்வ ஆதரவு காணப்பட்டதாகவும், தற்போது ஆட்சி மாற்றங்கள் மற்றும் அரசாங்க மாற்றங்களினால் உறவுகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
Spread the love