எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் துரதிஷ்டவசமாக தன்னால் போட்டியிட முடியாது என தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ, சிறந்த வேட்பாளர் ஒருவரை நிறுத்தி வெற்றி பெற்றதன் பின்னர் தான் அரசமைப்பில் மாற்றங்களை கொண்டுவருவேன் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியா சென்றுள்ள அவர் பெங்களுரில் வைத்து இந்து நாளிதழிற்கு வழங்கிய நேர்காணலிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழ்ர்களே எதிர்த்தனர் எனவும் இந்தியா மற்றும் இலங்கைக்கிடையிலான பிரச்சினை சர்வதேச மயப்படுத்தப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் யுத்தம் தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள சந்தேகங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் மக்களை திருப்தியடையச் செய்யலாம் என்ற போதிலும் அரசியல்வாதிகள் திருப்தியடையமாட்டார்கள் எனவும் அதுவே தனது பிரச்சினை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
1 comment
1. 1987 ல் செய்துகொள்ளப்பட்ட இலங்கை- இந்திய ஒப்பந்தத்தை, இலங்கை சார்பில் கையொப்பமிட்ட திரு. JR . ஜயவர்தன உட்பட, ஒட்டுமொத்தச் சிங்கள மக்களும் எதிர்த்ததைத் திரு. மகிந்த ராஜபக்ஷ எப்படி அவ்வளவு சுலபமாக மறந்தார்?
2. 1987- 1989 ம் ஆண்டு காலப் பகுதியில் JVP அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட கிளர்ச்சி
நடவடிக்கைகளின்போது உணவுப் பொருட்கள் உட்பட, இந்திய இறக்குமதி பொருட்கள் எல்லாவற்றையும் ஒட்டுமொத்தப் பெரும்பான்மைச் சிங்கள மக்களும் புறக்கணித்துத் தமது எதிர்ப்பைக் காட்டியதையும் இவரால் எப்படி மறக்க முடிந்தது?
3. இந்தியத் தலைவரான திரு. ராஜீவ் காந்தியை விருந்தினராக வரவழைத்தது துப்பாக்கிப் பிடியால் தலையில் அடித்துச் சிங்களம் அவமதித்ததை விட, முறைகேடாக நடந்த இராணுவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தது, நியாயமானதே!
மேற்குறித்த சந்தர்ப்பங்களின்போது இந்திய படைகளின் தலையீடு இருந்திருக்குமானால் சிங்களவர்களும் ஆயுதப் போராட்ட மூலமாகத் தமது எதிர்ப்பை காட்டாது பூப்பறித்துக்கொண்டா இருந்திருப்பார்கள்?
இலங்கை- இந்திய ஒப்பந்தத்துக்குப் பின்னர் இலங்கைக்கு வந்த இந்திய அமைதிகாப்புப் படையினரை முழுமனதாக வரவேற்றவர்கள் வட- கிழக்கை வாழ்விடமாகக் கொண்ட தமிழர்கள்தான் என்பதையும் சொல்லியேயாக வேண்டும்.
மேலும், அமைதி காக்க வந்தவர்கள் நடுநிலைமை பிறழ்ந்து தமிழ்ப் பெண்களைப் பெண்டாடும்போது, அதைக் கண்டும் தமிழர் கைகள் பூப்பறிக்க வேண்டுமென்று திரு. மகிந்த ராஜபக்ஷ எண்ணுகின்றாரா?