இந்திய அரசாங்கத்தின் நிதியொதிக்கீட்டில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் தலைமையில் மாத்தறை (தெணியாயா) செம்புவத்தை தோட்டத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள 50 தனிவீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று 10-02-2019 திகதியன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாக்கல ரத்னாயக்க, மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், அம்பாந்தோட்ட இந்திய உதவி உயர்ஸ்தானிகர் பிரேம் கே. நாயர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.