நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இரத்துச் செய்ய முடியாவிட்டால் நாட்டின் பிரதான கட்சிகள் இரண்டிற்கும் சவால் விடுக்கும் வகையில் மக்கள் விடுதலை முன்னணி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் என அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிகளுக்கு இச் சவாலை விடுப்பதாக கூறிய அவர், நாட்டின் அதிகாரம் முழுவதும் ஒரு தனிநபரின் கையில் காணப்படுவது, சர்வாதிகார ஆட்சிக்கே வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு ஏனைய உலக நாடுகளை உதாரணத்திற்கு எடுத்து ஒப்பிடத் தேவையில்லை என்று தெரிவித்த அவர், எமது நாட்டின் அரசியல் களமே அவ்வாறான நிலையிலேயே உள்ளதாகவும் மேலும் கூறியுள்ளார்.