166
குறைந்த வருமானமுடைய தமிழ் மற்றும் சிங்கள குடும்பங்கள் இரண்டுக்கு இராணுவத்தினரால் வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்றையதினம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.
வவுனியா பம்பைமடு பிரசேத்தினை சேர்ந்த தியாகராசா மூர்த்தி என்பவரின் குடும்பத்திற்கும் வெலியோயா பிரசேத்தை சேர்ந்த சிங்களக் குடும்பம் ஒன்றுக்குமே இவ்வாதறு வீடுகள் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
வன்னி கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேராவின் வழிகாட்டலில் உள்ளூர் மற்றும் புலம்பெயர்ந்தவர்களின் நிதிப்பங்களிப்போடு இவ்வீடுகள் அமைக்கும் பணிகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love