உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலத்தில் கள்ளச்சாராயம் காரணமாக சுமார் 100 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுகுறித்து விசாரிக்க உத்தரபிரதேச அரசு சார்பில் 5 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் கடந்த 8-ம் திகதி கள்ளச்சாராயம் வாங்கிக் குடித்த பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதில் 12 பேர உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியானது. பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த பலரும் அடுத்தடுத்து உயிரிழக்க, தற்போது பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க, 5 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை உத்தரபிரதேச அரசு அமைத்துள்ளது. இந்த குழு விரைவில் தனது விசாரணையை தொடங்கவுள்ளது.