191
மெக்சிகோவில் தனியாருக்கு சொந்தமான பயிற்சி நிறுவனம் ஒன்றின் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மெக்சிகோவின் தலைநகர் மெக்சிகோ சிட்டியில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள அதிசாபன் டி ஸரகோசா நகரிலேயே நேற்றுக்காலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் திடீரென கீழே விழுந்ததனை தொடர்ந்து விமானம் தீப்பிடித்து எரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக கண்டறியப்படாத நிலையில் விசாரணைகள் நடைபெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love