ஜப்பானில் பூங்கா ஒன்றினுள் நுழைந்த இனந்தெரியாத சிலர் அங்கிருந்த 400 ஆண்டுகள் பழமையான ஷிம்பாக்கு மரம் உட்பட 8 போன்சாய் மரங்களை திருடி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே உள்ள பகுதியை சேர்ந்த வய துமுதிர்ந்த தம்பதிகள் தங்கள் வீட்டின் அருகே இந்த பூங்காவினை அமைத்து 3 ஆயிரம் போன்சாய் மரங்களை வளர்த்து வருகிறார்கள்.
போன்சாய் மரங்கள் முதிர்ந்த மரங்களின் தோற்றத்தில் குள்ளமாகவும், பார்வைக்கு அழகாகவும் இருக்கும் அதேவேளை தொட்டிகளில் வளர்ப்பது ஆகும். இந்த நிலையில், அந்த தம்பதியின் பூங்காவிற்குள் இருந்த 8 போன்சாய் மரங்களை திருடிச் செல்லப்பட்டுள்ளது. திருடப்பட்ட 400 ஆண்டுகள் பழமையான ஷிம்பாக்கு மரத்தின் பெறுமதி 90 ஆயிரம் டொலர்கள் ஆகும்.
இந்தநிலையில் அந்த மரங்களை தாங்கள் குழந்தைகளை போல் வளர்த்து வந்ததாகவும், அவை காய்ந்து போனால் தாங்கள் பெருந்துயர் அடைவோம் எனத் தெரிவித்துள்ள அந்த தம்பதி, மரங்களை திருடி சென்றவர்கள் அவற்றுக்கு முறையாக நீர் ஊற்றி பராமரிக்க வேண்டும் எனம் கோரிக்கை வைத்துள்ளனர்