நேற்றையதினம் டர்பனில் ஆரம்பமாகியிருந்த தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட்போட்டியின் போது தென்னாபிரிக்க வீரர் டேல் ஸ்டெய்ன் (Dale Steyn) திரிமானேயின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் கபில்தேவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
இந்தப் போட்டியின் போது முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 235 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடிய இலங்கை அணியின் திரிமானே ஓட்டம் எதுவும் எடுக்காமல் ஸ்டெய்ன் பந்தில் ஆட்டமிழந்திருந்தார்.
இந்த விக்கெட் மூலம் கபில்தேவின் சாதனையை ஸ்டெய்ன் சமன் செய்துள்ளார். கபில்தேவ் 131 டெஸ்டில் 434 விக்கெட் கைப்பற்றி அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்களில் 8-து இடத்தில் இருந்தார். ஸ்டெய்ன் 92 டெஸ்டில் 434 விக்கெட் கைப்பற்றி அவரை சமன் செய்துள்ளார்.
அத்துடன் அதிக விக்கெட் கைப்பற்றிய வேகப்பந்து வீரர்களில் 5-வது இடத்துக்கும், ஒட்டு மொத்தமாக 8-வது இடத்துக்கும் முன்னேறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது