உரிய காலத்தில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல்களை நடத்துவதே ஜனநாயக பண்பாகும் எனத் தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய மாகாணசபைகளுக்கான தேர்தலை உரிய காலத்தில் நடத்த முடியாவிட்டால் தேர்தல்களை நடத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் மாகாணசபைகள் தேவையில்லை என கருதினால் அரசியல் அமைப்பிலிருந்து மாகாணசபை முறையினை நீக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எந்த தேர்தலினை முதலில் நடத்த வேண்டும் என்பதில் தர்க்கம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனவும் முதலில் மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டும் எனவும் அதன் பின்னரேயே ஏனைய தேர்தல்களை நடத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் மாகாண சபை தேர்தல் நடத்தப்படாவிட்டால் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பதவியை விட்டு விலகப் போவதாகவும் குறிப்பிட்டார்.