மே.இ.தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷனன் கப்ரியல் ( shannon Gabriel)க்கு ஐசிசி 4 போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ளது. செயிண்ட் லூசியா மைதானத்தில் மே.இ.தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து அணித்தலைவர் ஜோ ரூட்டை நோக்கி வசைபாடியமைக்காகவே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜோ ரூட் மற்றும் ஜோ டென்லி ஆகியோர் துடுப்பாடிக் கொண்டிருந்த போது மே.இ.தீவுகள் வேகப்பந்து வீச்சாளர் ஷனன் கப்ரியல் விக்கெட் எடுக்க முடியாத வெறுப்பில் ஜோ ரூட்டை நோக்கி வசைபாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மன்னிப்புக் கோரிய ஷனன் கப்ரியல் நெருக்கடியான ஒரு தருணத்தில் இந்த வார்த்தைப் பரிமாற்றம் நடைபெற்றது எனவும் அழுத்தம் அதிகமாக இருந்த வேளையில் ஜோ ரூட் தன்னை ஆழமாகப் பார்த்த போது தனது டென்ஷனையும் கொஞ்சம் குறைத்துக் கொள்வதற்காக ஏன் என்னைப் பார்த்து ஏன் புன்னகை செய்கிறீர்கள்? நீங்கள் ஆண்கள் பிரியரா எனக் கேட்டதாக தெரிவித்துள்ளார்.
அதற்கு ஜோ ரூட் அதனை பிரைழயாக் கூறாதே, தன்பாலின நாட்டமுடையோராக இருப்பதால் தவறொன்றுமில்லை எனத் தெரிவித்தார்.
அதற்கு தானும் அது பற்றி எனக்கு பிரச்சினை இல்லை, ஆனால் என்னைப் பார்த்து புன்னகைப்பதை நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்ததாக ஷனன் கப்ரியல் தெரிவித்துள்ளர்h.
இந்த விவகாரத்தை ஜோ ரூட் மைதானத்திலேயே முடிந்தது என பெருந்தன்மையாக விட்டு விட்ட போதும் ஐசிசி தானாகவே முன் வந்து ஜோ ரூட் அவ்வாறு கூறியதற்கு காரணம் என்ன விசாரித்த நிலையில் ஷனன் கப்ரியல் பேசியது தவறு என தெரிவித்து அவருக்கு ஆட்டத்தொகையில் 75 வீத அபராதமும், 4 போட்டிகளில் விளையாட தடையும் விதித்துள்ளது.
தன் தவற்றை உணர்ந்து கப்ரியல் மன்னிப்பு கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது