குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் மற்றும் நாகா்கோவில் பகுதிகளில் வனஜீவராசிகள் திணைக்களம் ஆக்கிரமித்துள்ள 5765 ஹெக்ரயா் நிலப்பகுதியை விடுவிக்கும்படி பிரதமா் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளாா்.
3 நாள் பயணம்; ஒன்றை மேற்கொண்டு இன்று யாழ்ப்பாணம் சென்ற பிரதமா் ரணில் விக்கிரமசிங்க யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தி முன்னேற்றங்கள் குறித்த கலந்துரையாடல் ஒன்றினை யாழ்.மாவட்ட செயலகத்தில் நடாத்தியிருந்தாா்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் வடமராட்சி கிழக்கில் மக்களுடைய குடியிருப்புக்கள், விவசாய நிலங்கள், மீனவா்களின் தொழில் இடங்கள், பாடசாலைகள், ஆலயங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய சுமாா் 5765 ஹெக்ரயா் நிலப்பகுதியை வனஜீவராசிகள் திணைக்களம் தேசிய பூங்காவாக பிரகடனப்படுத்தியுள்ளது.
அந்த பிரகடனப்படுத்தலுக்கான வா்த்தமான அறிவித்தலை மீள பெறவேண்டும் என கூறியிருந்தாா்.
இதற்கு பதிலளித்த பிரதமா் ரணில் விக்கிரமசிங்க வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாாியை அழைத்து குறித்த வா்த்தமான அறிவித்தலை மீள பெறுமாறு, அரசாங்கம் கூறியிருக்கும் நிலையில் எதற்காக இவ்வளவு நாட்களும் அதனை மீள பெறவில்லை? என கேள்வி எழுப்பியதுடன், உடனடியாக தேசிய பூங்காவாக அறிவித்து பிரகடனப்படுத்திய வா்த்தமான அறிவித்தலை மீள பெறுமாறு உத்தரவிட்டுள்ளாா்.
இதேவேளை நாகா் கோவில் பகுதியில் 1237 ஹெக்ரயா் நிலம் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டள்ளதுடன், நாகா் கோவில் கிழக்கு, நாகா்கோவில் மேற்கு, நாகா்கோவில் தெற்கு ஆகிய 3 கிராமசேவகா் பிாிவுகள் அதற்குள் அடங்குகின்றது.
அதேபோல் சுண்டிக்குளம் பகுதியில் 4528 ஹெக்ரயா் நிலப்பகுதி தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ளது அதற்குள் முள்ளியான், போக்கறுப்பு, சுண்டிக்குளம் அகிய 3 கிராமங்கள் உள்ளடங்குகின்றது என கூறிப்பிடப்பட்டிருக்கின்றது.
மேலும் தொடா்ந்து கருத்து தொிவித்த பிரதமா் ரணில் விக்கிரமசிங்க விடுதலை புலிகள் காலத்தில் நான் அந்த பகுதிகளுக்கு சென்று வந்திருக்கிறேன். அங்கு எங்கே தேசிய பூங்கா இருக்கிறது? என கேள்வி எழுப்பினாா்.