சிம்பாப்வே தலைநகர் ஹராரே அருகே உள்ள கடோமா என்னும் நகரில் அமைந்துள்ள 2 சுரங்கங்களுக்கு அருகே கட்டப்பட்டு இருந்த அணை உடைந்ததில் சிக்கிக் கொண்ட 23 தொழிலாளர்கள் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்திருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 2 சுரங்கங்களும் நீண்ட காலமாக பயன்பாடின்றி காணப்பட்டுள்ள நிலையில் சட்ட விரோதமாக நுழைந்த சிலர் தங்க வேட்டையில் ஈடுபட்டு இருந்த நிலையிலேயே கடந்த 12ம் திகதி இவ்வாறு அணை திடீரென உடைந்துள்ளது.
இதனையடுத்து அதிலிருந்து பாய்ந்தோடிய வெள்ளம் 2 சுரங்கங்களிலும் நிறைந்தமையால் 23 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்ட நிலையில் மீட்புக்குழுவினர் சுரங்கத்தில் இருந்து தண்ணீரை வெளியேற்றி, தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். எனினும் அவர்கள் அனைவரும் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்திருக்கக் கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.